politics
Historic Anniversary: The Day Perarignar Anna Renamed Madras State to Tamil Nadu in 1967
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச்…

Remembering the historic day in July 1967 when Chief Minister C.N. Annadurai (Perarignar Anna) moved the landmark resolution in the Legislative Assembly renaming 'Madras State' to 'Tamil Nadu', Udhayanidhi Stalin celebrated the crowning moment of Tamil linguistic and political pride. Amidst rapturous cheers of 'Tamil Nadu Vazhga' echoing in the assembly hall, Anna fulfilled the deepest aspirations of the Tamil people and the supreme sacrifice of martyr Sankaralinganar. Udhayanidhi affirmed that protecting Tamil identity remains an eternal responsibility.
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று. ‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது. அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள். தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்! தமிழ் வெல்க! தமிழ்நாடு வாழ்க!! #தமிழ்நாடு_நாள்